குர்திஷ்கள் நசுக்கப்படுவார்கள்-துருக்கி அதிபர் எச்சரிக்கை

turkey 1
turkey 1

போர் நிறுத்த காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான குர்திஷ் போராளிகள் சிரியாவின் வடகிழக்கு எல்லையில் நிலைகொண்டுள்ளதால் துருக்கி தனது தாக்குதலை மீண்டும் தொடங்கவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவிற்கிடையிலான போரினை சுமுகமாக தீர்த்து வைக்கும் முகமாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு சென்று பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஒப்புக்கொண்டிருந்தது.

குர்திஷ்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அந்த பேச்சுவார்த்தையினூடாக ஒரு தீர்வு உருவாக்கவில்லை என்றால் துருக்கி தனது சொந்த திட்டங்களை செயல்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

குர்திஷ் போராளிகள் மீதான துருக்கியின் எல்லை தாண்டிய தாக்குதல் 5 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில் குர்திஷ் போராளிகள் சிரியாவிற்குள் நிறுவ விரும்பும் “பாதுகாப்பான வலயத்தை” விட்டுவிட வேண்டும் என்று துருக்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும் நூற்றுக்கணக்கான குர்திஷ் போராளிகள் சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் நிலைகொண்டுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.