விளையாட்டு விடுதியில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து பார்த்த எம்.பி நாமல் ராஜபக்ஷ!

Naamal
Naamal

விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் கொழும்பு-டொரிங்டனில் உள்ள விளையாட்டு விடுதியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று நெரில் சென்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் திடீரென குறித்த விடுதிக்கு சென்றதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த விடுதியில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்த அமைச்சர் மிகவிரைவில் அதற்கான தீர்வினை பெற்று தருவதாக கூறியுள்ளார்.

இதன்போது,குறித்த விடுதிக்கு வருகை தரும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பில்  விளையாட்டு துறை அமைச்சகத்தின் உறுப்பினர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.