ஐ.தே.கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாஸ ஏற்பார்: முப்பீட ஐக்கிய பிக்குகள் முன்னணி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 24 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 24 1

நல்லாட்சி அரசாங்கம் பௌத்த மதத்தை புறக்கணித்தமையே இன்றைய வீழ்ச்சிக்கான பிரதான காரணம் என முப்பீட ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அனுநாயக்க மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – லங்காராம விகாரையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பௌத்த மக்களின் ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை பொதுஜன பெரமுன நிரூபித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் ஏற்பார். அதற்கான மார்க்கத்தை நன்கு அறிவோம் எனவும் மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை எதிர்க் கொள்ளும் என்பதை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பலமுறை சுட்டிக்காட்டினோம்.

ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. தான்தோன்றித்தனமாக செயற்பாடுகளின் பிரதிபலனை அவர் இன்று அனுபவிக்கிறார்.

ரணில் விக்ரமசிங்க ஐ.தே.க.விலிருந்து தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை வெளியேற்றியமை அரசியல் ரீதியில் அவர் செய்த முதல் தவறு.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இனி முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார்.