ஏனைய மதங்களை அழிப்பது தேச பக்தியா ?

load
load

தங்களது மதத்தை விருத்தி செய்வதற்காக ஏனைய மதங்களின் தலங்களை அழிப்பதோ, தீ மூட்டுவதோ தேசப்பக்தி கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டி கெலிஓய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்.

“இந்த நாட்டில் தீவிரவாத செயற்பாட்டினை முழுவதாக அழிப்பதற்கான பொறுப்பினை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கியிருக்கின்றேன்.

30 வருடப் போரை முடிவுக்கு கொண்டுவந்த அவருக்கே எஞ்சியிருக்கும் தீவிரவாதிகளையும் அழிப்பதற்கு பொறுப்பு அளித்துள்ளேன். தீவிரவாதிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை.

தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது யார்? இன,மத,பேதமின்றி தீவிரவாதிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மரண தண்டனை அளிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

சில பிரிவினர், தேர்தல் முறையின்றி, ஜனநாயகமின்றி தற்கொலைகள் மூலம் இந்த நாட்டை அழிப்பதற்கு குழுவோ, பிரிவினரோ முயற்சித்தாலும், அவர்களுக்கு கட்டளையிடுகின்ற மற்றும் உதவுகின்ற தரப்பினருக்கு இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமை கிடையாது.

தீவிரவாதத்தை முற்றாக அழிக்கின்ற நிலைப்பாட்டில் நாங்கள் தீவிரவமாக இருக்கின்றோம்.

தீவிரவாதத்தை அழிக்கின்ற நோக்கில் இனவாதம், மதவாதத்தை ஏற்படுத்துவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.