வடக்கு மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரியை நியமிப்பதை மீள் பரிசீலனை செய்யுங்கள்

Loganathan 2

வடக்கு மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரியை நியமிப்பதை மீள் பரிசீலணை செய்யுங்கள் ஜனாதிபதி பிரதமரிடம் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் சபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திற்கான ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர் கடந்த காலங்களில் வவுனியா இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியாக செயற்பட்டு வந்தவர் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு மாகாணத்திற்கான ஆளுநராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பில் மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் நாம் பரிந்துரைப்பதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

அந்த வகையில் குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலணை செய்யுமாறு நாம் ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியுாரிடம் வேண்டுகை விடுக்கின்றோம். கடந்த காலத்தில் ரெயினோல்ட் குரே போன்றோர் சிறப்பாக செயற்பட்டார்கள். அதேபோன்று சிவிலியன் ஒருவரையு நியமிப்பதே பொருத்தமானது.

பொதுஜன பெரமுன கட்சியில் அமைச்சர்களாக இருந்த ஆளுமை மிக்க பலர் இருந்தார்கள். அவர்களை நான் இன்னார் என்று அடையாளம் காட்டவில்லை. அவர்களில் சிறந்த ஒருவரை ஆளுநராக நியமிப்பது பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் துரோகத்தனங்களால் பல இளைஞர் யுவதிகள் வேலை இல்லாது இன்று உள்ளனர். அவர்களிற்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். 25 வயதுடையவர்களாக இருந்த இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இன்று 40 வயது கடந்தவர்களாக உள்ளனர்.

அவர்களிற்கான வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர். இதன்போது தெரிவித்தார்.  நல்ல ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுமை மிக்க அமைச்சர்கள் உள்ளனர். வடக்கை பொறுத்தவரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பாக செயற்படக்கூடிய ஒருவர். அவரை எமது அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் போசகராக நேற்றைய தினம் ஏகமனதாக நியமித்துள்ளுாம் எனவும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த துணைத்தலைவர் ஏ.புண்ணியமூர்த்தி குறிப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக பாடசாலை ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவர்களிற்கான தொழில் உறுதிப்படுத்தல் (கென்போமேசன்) கிடைக்காத நிலை காணப்படுகின்றது. அதனால் அவர்களிற்கான வருடைந்த சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுக்கின்றனர்.

அவர்கள் குறித்த பதவிநிலைகளிற்கு அமர்த்தப்படுகின்றபோது 8ம் தர சித்தியுடனேயே இணைத்துக்கொள்ளப்பட்டனர். ஆனால் இன்று சாதாரண தர சித்தி எதிர்பார்க்கப்படுகின்றமையால் அவர்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கின்றர்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட ஊழியர்களிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வே்ணடும் என கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் உள்ளிட்ட ஊள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் பணிநிலைகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கரு்தது தெரிவித்த வடமாகாண உள்ளுராட்சி மன்ற ஊழியர்களின் இணைப்பாளர் ராம் சூரியகுமார் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆளணி பற்றாக்குறை இருப்பது தொடர்பில் அனைவரும் அறிவீர்கள். பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் பிரச்சினைகளையும் கலந்து ஆலோசனை செய்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து மாற்று நடவடி்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது முதல் கோரிக்கையாக உள்ளது.

அவ்வாறு ஆளணி நிரப்பப்படும்போது பணியில் உள்ள ஊழியர்களின் தகுதி நிலைகளிற்கு ஏற்ப அவர்களை உள்வாங்கி பின்னர் அந்த இடத்திற்கு நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்தில் கொண்டு இவ்விடயத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.