ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்சவின் கருத்து!

Picture 1.jpg
Picture 1.jpg

வீண்விரயம் மற்றும் ஊழலை தடுத்து அதிக திறன்கொண்ட கொள்முதல் செயற்பாடுகள் தேவை என பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை கணக்காளர் சேவை சங்கம் மற்றும் பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கும் இடையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிறுவனத்தின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும், திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுத்து செல்வதற்கான மாற்றம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது இலங்கை கணக்காளர் சேவை சங்கம், தமது துறையில் காணப்படும் பிரச்சினை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.