கஜேந்திரகுமார் – சீன முகவரா அல்லது மனநோய் பிடித்தவரா? – வலுக்கும் சந்தேகம்?

gpsp
gpsp

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் பொது ஆவணம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பங்கும் உள்ளது. இந்நிலையில் அது இந்தியாவின் பின்னணியின் உருவாக்கப்பட்டது என கூறினால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சீனாவின் பின்னணியிலா செயற்படுகின்றது?

மேற்கண்டவாறு ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் தலைவா் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா். மேற்படி விடயம் தொடா்பாக அவருடைய இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவா் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் ஐந்து கட்சிகள் இணைந்த 13 கோரிக்கைகளை ஐனாதிபதி வேட்பாளர்கள்
மற்றும் அவர்களது கட்சிகளிடமும் முன்வைத்திருந்தன. இந்த 13 கோரிக்கைகளையும் உருவாக்குவதில் தமிழரசுக்
கட்சி, ரெலோ, புளொட், ஈ.பீ.ஆா்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ஆகிய ஆறு கட்சிகள் இணைந்து தான் ஆவணங்களைத் தயார் செய்திருந்தோம். இதில் இன்னும் குறிப்பாகக் கூறுவதா னால் இந்த ஆவணத்திலுள்ள அனைத்து விடங்களையும் முன்னணியும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர்கள் கூறி ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விடயம் இந்த ஆவணத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

ஆகவே 13 கோரிக்கைகள் அடங்கிய இந்த ஆவணத்தில் ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்டிருந்தாலும் மக்கள் முன்னணியையும் உள்ளடக்கியதாக ஆறு கட்சிகளைக் கொண்ட ஆவணனமாகத் தான் இந்த ஆவணம் இருக்கி ன் றது. குறிப்பாக இந்த ஆவணத்தை இறுதிப்படுத்துகின்ற நேரத்தில் மக்கள் முன்னணி

தனது பல கருத்துக்களையும் திருத்தங்களையும் சொல்லியிருந்தது. அந்தத் திருத்தங்கள் யாவும் இதில் உள்ளடக்கப்பட்டு ம் இருந்தது. அவ்வாறான சூழ்நிலையில் தற்போது இந்த ஐந்து கட்சிகளும் இந்திய அரசாங்கம் சொல்வதைக் கேட்டுத் தான் இந்த வேலைகளைச் செய்த முடித்திருக்கின்றன என்றும்

இந்திய அரசாங்கத்தினுடைய ஏnஐன்டுகளாக இவர்கள் செயற்படுகின்றார்கள் என்று கூறுவதுமான இவர்களது கருத்துக் களில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றது. ஏனென்றால் இந்த ஆவணத்தில் வந்திருக்கின்ற விடயங்களில் பல திருத்தங்க ளைச் சொன்னவர்கள் இவர்கள் தான். ஆகவே இவர்கள் யார் சொல்லி இந்தத் திருத்தங்களைக்

கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதில் விசேடமாக இந்தியா சொல்லித் தான் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வந்தார்களா? என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் இந்தத் திருத்தங்கள் உள்ளடங்கிய ஆவணத்தைத் தான் இப்போது இவர்கள் விமர்சிக்க முற்படுகின்றார்கள்.

ஆகவே இந்தத் திருத்தங்களைச் சொன்னதால் அவர்களுக்கும் இந்த ஆவணத்தில் முழுமையான பங்கு பற்றல் இருக்கின்றது. அந்த வகையில் அவர்களும் ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை ஆதரித்து கையெழுத்து வைத்தவர்களை இந்திய அரசின் ஏnஐன்டுகள் என்று சொல்லி அவர்கள் பேசுகின்றனர்.

உண்மையில் இந்தியா என்று சொன்னாலே பிரச்சனை என்ற விதமான நோய் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் எல்லா விடயங்களையும் பார்க்கின்ற போதும் எடுத்த எடுப்பில் உடனடியாகவே அது இந்திய
ஏஜென்டுகள் செய்கின்ற வேலை அல்லது அவ்வாறானவர்களுடைய கருத்து

அல்லது அவர்கள் சொன்னதை இவர்கள் செய்கின்றார்கள் என்று சொல்லிச் சொன்னால் நான் கேட்கின்றேன் நீங்கள் சீனாவினுடைய ஏஜென்டுகாளக இருக்கின்றீர்களா? ஏனெனில் உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் தொடர்ச்சியாகவே இந்தியாவை சாடி வருகின்றீர்கள். அதிலும் நீங்களும் சேர்ந்து செய்கின்ற வேலைகளுக்கு இந்திய முத்திரையைக் குத்துவது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆகவே கஜேந்திரகுமார் அவர்களுக்கு மிக மோச மான வகையில் ஒருவிதமான வருத்தம் நிச்சயமாக இருக்கின்றதாகவே நான் நம்புகின்றேன். அதாவது இந்தியா என்று சொன்னாலே அவர்களுக்கு ஒரு விதமான வருத்தம் வருவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஆகவே அவர் முதலில் தனது நிலைப்பாடுகள் உணர்வுகள் எல்லாம் சரியா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.