முல்லைத்தீவில் காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன-பிரதேச மக்கள்

t
t

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட கோட்டைகட்டியகுளம் ஐயன்கன்குளம் தென்னியன்குளம் பகுதிகளில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவம் பின்தங்கிய பிரதேசங்களாக காணப்படுகின்ற கோட்டைகட்டியகுளம் ஐயன்கன்குளம் தென்னியன்குளம் போன்ற பகுதிகளில் காணப்படும் பெருமளவான இயற்கை வளங்கள் நாளாந்தம் அழிக்கப்பட்டு வருகின்றன என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதாவது இப்பகுதிகளில் உள்ள நூற்றாண்டு காலபழமை வாய்ந்த பெருமளவான காட்டுமரங்கள் கனரக இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டு அவை சட்டவிரோதமானமுறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றித்தெரியாது என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் குறித்த பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற மரக்கடத்தல்களை விட மணல் கிரவல் என்பனவும் பெருமளவில் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இது தொடர்பில் சட்டத்தை நிலை நாட்டும் அதிகாரிகள் தொடர் மௌனம் காட்டுவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.