சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஓய்வுகொடுத்துள்ள விக்கி, கஜன்

images 1 3
images 1 3

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் நாடாளுமன்றத்தில் இருவர் ஓய்வுகொடுத்துள்ளார்கள். அவர்கள்தான் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும். இவர்கள் இருவரும் தமிழ் – சிங்கள மக்களின் உறவைப் பாதிக்கும் கடும் இனவாதக் கருத்துக்களால் சபையை அலங்கரிப்பதற்கு முற்படுகின்றார்கள்.”-என ஆளும்கட்சியின் கூட்டத்தில் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. தெரிவித்துள்ளார

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும் செயற்பட்டார்கள்; தற்போதும் செயற்படுகின்றார்கள். அவர்களைத் திருத்தவே முடியாது.

நல்லாட்சி அரசின் காலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் இணைந்து சபையில் கலாட்டா பண்ணினார்கள். தற்போது அவர்கள் இருவருக்கும் சபையில் ஓய்வுகொடுத்துவிட்டு அவர்கள் பாணியில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் செயற்படத் தொடங்கிவிட்டார்கள். சுயநிர்ணய உரிமை விடயத்தையும் போர்க்குற்ற விசாரணை விவகாரத்தையும் முன்னிலைப்படுத்தி இவர்கள் உரையாற்றுகின்றார்கள். சர்வதேசப் பொறிமுறைக்குள் எம்மைச் சிக்கவைப்பதுதான் இவர்களின் பிரதான நோக்கம். புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவர்கள் செயற்படுகின்றார்கள். இதற்கு விரைவில் முடிவு காணப்படும்.

எனவே, சபையில் எமது அணி உறுப்பினர்கள் அனைவரும் சபை விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியாக இருக்க வேண்டும். கட்சியின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். அனைவருக்கும் சபையில் உரையாற்ற படிப்படியாகச் சந்தர்ப்பம் வழங்கப்படும்” – எனவும் குறிப்பிட்டுள்ளார்