பக்கச்சார்பற்ற விசாரணைக்கு குந்தகம்- தினேஸ் குற்றச்சாட்டு

Dinesh
Dinesh

கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் ஹக்கீமும் விசேட தெரிவுக்குழு உறுப்பினராக இருக்கும், இந்த அறிக்கையை எவ்வாறு ஏற்க முடியும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு குந்தகமாக அமைகிறது என ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் விசேடபாராளுமன்ற குழுவின் அறிக்கை நேற்று (Oct.23) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன் வைத்து உரையாற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானை தெரிவுக்குழு உறுப்பினர் ஹக்கீம் சந்தித்துள்ளார். ஆனால் அவர் இந்த தாக்குதல் தொடர்பான குழுவில் இருக்கிறார். இது பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு குந்தகமாக உள்ளது. இது ரவூப் ஹக்கீம் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல முழு பாராளுமன்றத்தினதும் பிரச்சினையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.