சாட்சியங்கள் காணப்படுமாயின் முகப்புத்தகத்தில் பதிவேற்றுங்கள்!

போக்குவரத்து திணைக்களம்
போக்குவரத்து திணைக்களம்

அரச நிறுவனங்களில் தனது திணைக்களம் மோசடிக்குரிய நிறுவனமாக பெயர் பெற்றுள்ளமையை தாம் ஏற்றுக்கொள்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் சட்டத்தரணி சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

இதுவரை லஞ்ச ஊழல் எதிலும் ஈடுபடாத நான் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இவ்வாறு லங்ச ஊழல் நடைபெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதோடு அவ்வாறான செயற்பாடுகள் குறித்து சாட்சியங்கள் காணப்படுமாயின் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் பொது மக்களிடம் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.