சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற போது சிக்கியவர்; சிறைக்காவலர் சங்க தலைவர்!

15 2

ஹெரோயின், மொபைல் போன்கள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றபோது சிக்கியவர் சிறைக் காவலர் சங்கத்தின் தலைவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் கையிருப்புடன் அவரை (வியாழக்கிழமை) 27 ஆம் திகதி பேலியகொட குற்றத் தடுப்புபிரிவு கைது செய்தது.

அவரது வீட்டில் சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. சிறையிலுள்ள ஹைப்ரிட் சூடா என்ற போதைப்பொருள் வியாபாரிக்கு ஹெரோயின் கொடுக்க தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

ஹைப்ரிட் சூடா என்ற கடத்தல்காரனின் அடியாளால் தனக்கு ஹெரோயின் வழங்கப்பட்டதாகவும், அதை எடுத்து ஹைப்ரிட் சூடாவிடம் ஒப்படைத்த பின்னர் 60,000 ரூபா பெறுவதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

தற்போது சிறைச்சாலையில் எஸ்.டி.எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஹெரோயின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படாமல், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.

சந்தேகநபர் ஹெரோயின், மொபைல் போன்கள், சிம் கார்ட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்கு ஏறக்குறைய ஒரு வருடமாக எடுத்துச் சென்று கைதிகளிடம் ஒப்படைத்து பெரும் தொகையை சம்பாதித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.