சட்டவிரோத தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

dddd
dddd

இலங்கை கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினருடன் வடக்கு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போது சட்டவிரோத தங்கக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 5.5 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இந்த சிறப்பு ரோந்து நடவடிக்கை காரைநகர் ‘லைட்ஹவுஸ்’ பகுதியிலிருந்து 14.5 கடல் மைல் தொலைவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்று இருப்பதை கண்டறிந்த கடற்படையினர், படகினை சோதனையிட்டபோது 04 பொதிகளில் சுமார் 05 கிலோ மற்றும் 500 கிராம் தங்கத்தை மீட்டனர்.

மற்றும் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களையும் இதன்போது கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் 30 மற்றும் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக  விசாரணைகளுக்காக அவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கமும் யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.