இன்று முதல் வழமைக்கு திரும்பியது பாடசாலைகள் ; கல்வி அமைச்சு

6673 secondary students leaving new lab
6673 secondary students leaving new lab

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வழமைக்கு திரும்பியதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது .

அதன் படி தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் வழமை போல் காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் இடம்பெறுகின்றது என்றும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .

கொரோனா வைரஸ் தாக்கமானது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்த பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .