உலகளாவிய ரீதியில் 8.5 லட்சத்தை கடந்தது; கொரோனா தொற்றின் மரணங்கள்

1 image Coronavirus MERS CoV
1 image Coronavirus MERS CoV

உலகளாவிய ரீதியில் கொரோன வைரஸ் தாக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளை அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ள நிலையிலும் இந்த தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 68 லட்சத்து 58 ஆயிரத்து 211 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 112 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

கொரோனாவில் இருந்து 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .