வெளிநாடுகளுக்கு செல்ல நிமல் பெரேராவிற்கு அனுமதி!

unnamed 3
unnamed 3

வர்த்தகர் நிமல் பெரேராவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான பயணத்தடையை நீக்குவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தினால் ஏயார் பஸ் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிமல் பெரேரா சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி தெரிவித்திருந்ததாவது, தன்னுடைய தரப்பினருக்கு சொந்தமானதாக தெரிவிக்கப்படும் SABRE VISION LTD நிறுவனத்தின் சிங்கப்பூர் கணக்கிற்கு 4 இலட்சம் டொலர் வைப்பு செய்யப்பட்டமையையை தனது தரப்பினர் அறிந்திருக்கவில்லை.

அது தொடர்பில் விசாரணை செய்ய சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய அதனை விசாரணை செய்வதற்கு நிமல் பெரேராவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான பயணத்தடை இரத்து செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.