ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை..!

1

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கலந்துரையாடி, பெரும்பாலும் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.