சுகததாச விளையாட்டு வளாகத்திற்குள் இளைஞர் விவகார அமைச்சை மாற்ற நடவடிக்கை!

Sugatadasa Stadium
Sugatadasa Stadium

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகத்தை சுகததாச விளையாட்டு வளாகத்திற்குள் மாற்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

மார்ச் 2021 இல் உலக வர்த்தக மையத்துடனான ஒப்பந்தம் முடிந்தவுடன் அமைச்சை இடம்மாற்றுமாறு நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இளைஞர் விவகார அமைச்சு தற்போது உலக வர்த்தக மையத்தில் இயங்கி வருகிறது. அமைச்சு கட்டடத்திற்காக மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபா வாடகை செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.