விசேட தேடுதலின் போது போதைப்பொருளுடன் நால்வர் கைது

ppp
ppp

கடற்படையினர் மற்றும் கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திஸ்ஸமஹாராம, பன்னேகமவ மற்றும் தெம்பரவெவ பகுதியை சேர்ந்தவர்களாவர் . மேலும்
பன்னேகமுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 09 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது .

மேலும் இரு சந்தேகநபர்களிடம்மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய 06 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேக நபரும் பின்னர் மேலதிக விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரும் 681 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .