யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே: மருத்துவர் சி.யமுனாநந்தா!

625.500.560.350.160.300.053.800.900.160.90 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 3

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே எனவும் அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல என்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில், இலங்கைக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, “யாருடைய மொழி உலகிலேயே பழைய மொழி என விவாதித்துக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்மொழியை புறந்தள்ளும் ஆதரவு கருத்திற்கு கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து வலுச்சேர்ப்பதாகக் கருதப்படுகின்றது என்ற வகையில் யாழிலிருந்து வரும் பத்திரிகை ஒன்றில் 02.09.2020ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தை சுட்டிக்காட்டி மருத்துவர் சி.யமுனாநந்தா சில வரலாற்று விடயங்களை இன்று வியாழக்கிழமை முன்வைத்துள்ளார்.