மக்களின் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வு ; ஜனாதிபதி

ggggggggggggggggggg
ggggggggggggggggggg

புதன் கிழமைகளில் இடம்பெறும் பொதுமக்கள் சந்திப்பில் சகல அமைச்சர்களும் தமது அமைச்சுக்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் .

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த உத்தரவினை ஜனாதிபதி தெரிவித்தார் என்று அரசாங்கதகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

மக்கள் சந்திப்பு தினங்களில் அரச அதிகாரிகள் மக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன் கிழமை நாட்களில் அமைச்சுக்களில் இருப்பதில்லை என அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் அமைச்சுக்களில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்

மேலும் மக்களால் முன்வைக்கப்படும் அனைத்து முறைப்பாடுகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிப்பிடத்தக்கது .