பச்சை நிறமாக மாறியுள்ள இலங்கையை சூழவுள்ள பெரும்பாலான கடல்நீர்!

201909120925511072 Why green color change in pamban sea water SECVPF
201909120925511072 Why green color change in pamban sea water SECVPF

இலங்கையை சூழவுள்ள பெரும்பாலான கடல்நீர் பச்சை நிறமாக மாறியிருப்பது அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கொழும்பை அண்மித்த பகுதியான மொரட்டுவ அங்குலான பிரதேச கடல்நீர் இவ்வாறு பச்சை நிறமாக தோற்றமளித்துள்ளது.

அங்கு பிடிக்கப்பட்ட மீன்களும் மஞ்சள் மற்றும் பச்சை நிற தோற்றமுடையதாக இருந்துள்ளதுடன் மீனவர்களின் வலைகளும், படகுகளும் பச்சை நிறம் கொண்ட இரசாயனம் பூசப்பட்டதாக காட்சியளித்திருக்கின்றன.

இதுதொடர்பில் நாரா திணைக்களத்திடம் கடந்த 31ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே காலி, களுத்துறை, பயாகல, பேருவளை, சிலாபம் மற்றும் மோதர ஆகிய கடலோரப் பகுதிகளிலும் இவ்வாறு பச்சை நிறமாக கடல்நீர் மாற்றமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடல்நீர் பச்சைநிறமாக மாற்றமடைந்ததற்கான காணம் தொடர்பில் நாரா நிறுவனம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.