தேசிய ஆடை உற்பத்தி தொடர்பில் எமது அரசு அதிகூடிய கவனத்தை செலுத்தியுள்ளது-விமல் வீரவன்ச

vimal viravansa0987654345
vimal viravansa0987654345

தேசிய ஆடை உற்பத்தி தொடர்பில் எமது அரசு அதிகூடிய கவனத்தை செலுத்தியுள்ளது என கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் நேற்று(04) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொரோனாவுக்கு முன்னர் தேசிய ஆடை உற்பத்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போது அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதுடன், அவர்களின் ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்குள்ள தடைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்காக சர்வதேச ரீதியான சாதாரண சந்தை வாய்ப்புகள் என்ற தொனிப்பொருளில் சர்வதேச சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தோம்.

அதன் பிரகாரம் தேசிய ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஆடை ஏற்றுமதி தொடர்பில் விளக்கமளிப்பது அமைச்சின் பொறுப்பாகும். ஏற்றுமதி சபை மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி இந்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.