தயாசிறி ஜயசேகரவின் கருத்து உண்மைக்கு புறம்பானது; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

குமாரதுங்க
குமாரதுங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என தனது முகநூல் பக்கத்தில் மூலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69வது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்துக்கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்தானது உண்மைக்கு புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளார் .

மேலும் கடந்த காலங்களில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று ஆண்டு நிறைவு மாநாடுகளுக்கு எனக்கு எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

கட்சியின் உறுப்பினர்களை ஏமாற்றும் நோக்கில் இவர்களால் கூறப்படும் பொய்கள் குறித்து ஆராய்வது உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் கடமையாகும் .

அதாவது மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு பல வருடங்களாக எனக்கு அழைப்புகள் கிடைக்கவில்லை அதே போலவே கட்சியின் மாநாடுகளுக்கு எந்தவித அழைப்பும் கிடைக்கவில்லை.

அப்படி கிடைத்திருந்தால் நாட்டுக்கு சேவையாற்ற வழியை ஏற்படுத்திக்கொடுத்த கட்சிக்காக நான் அவற்றில் கலந்துக்கொள்ளாமல் இருந்திருப்பேன் என நீங்கள் நினைக்கின்றீர்களா?. அப்படியான அழைப்புகள் கிடைத்திருந்தால், அவற்றை சந்தோசமாக ஏற்றுக்கொண்டிருப்பேன் எதிர்காலத்திலும் இவ்வாறே நடந்திருக்கும் .

கட்சியை இல்லாதொழிப்பவர்களிடம் இருந்து அதனை காப்பாற்றும் நேரம் வந்துள்ளது என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .