ஆசிரியர் வாண்மை விருத்திக்கான செயலமர்வு

01 13

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை ஆசிரியர் வாண்மை விருத்தி வேலைத் திட்டம் தொடர்பாக ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான செயலமர்வு கல்குடா எம்.ஜே.எப். நிலையத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இன்ஷாக் தலைமையில் நடைபெற்ற செயமலர்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், கந்தளாய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.மர்சூக், காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ஏ.றியாஸ், கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஸ்வி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அஹ்ஷாப், ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் ஆசிரியர்களான ஏ.எம்.அஸீஸ், ப.ஹானுகிருஷ்னா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி என்றால் என்ன?, ஆசிரியர் என்பது தொழில் அல்ல தொண்டு, ஆசிரியர் மாணவர்களுக்கு இடையிலான தொடர்பு, ஆசிரியர்களின் கடமைகளும், பொறுப்புக்களும், நிலைபேறான அபிவிருத்தி என்னும் தலைப்பில் கலந்து கொண்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டது.