மட்டக்களப்பு வாகரையில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

01 2 2
01 2 2

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான புணாணை கிராமத்தில் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் வீடுகள் அமைத்துக் கொடுக்கும்
நிகழ்வும் இன்று(07) இடம்பெற்றது.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் டாக்டர் சந்திக்க எபடிகடுவ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் தலைவர் ஜகத் சுமதிபால மற்றும் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், பௌத்த மதகுருமார், பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு நிர்மானிக்கப்படும் ஒரு வீட்டின் பெறுமதியானது ஐந்து இலட்சம் ரூபாய் என்று அமைப்பின் தலைவர் ஜகத் சுமதிபால தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வீடுகளை அமைப்பதற்கு உதவிய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் மாவட்ட கிளையினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.