நிலைபேறான தன்மைக்கு புதிய அரசியலமைப்பு அவசியம்; கொழும்பு பேராயர்

wimal weerawansa 2
wimal weerawansa 2

புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்கு பொறுத்தமான வகையில் இடம்பெற வேண்டும் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார் .

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவை சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்ததாக
அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகள் குறித்து நுணுக்கமான முறையில் அவதானித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார் என்றும் அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .