பாடசாலைகளில் பிற்பகல் உணவு திட்டம் செப்டம்பர் 14 முதல்-கல்வி அமைச்சு

canteen SCHOOL 696x348 1
canteen SCHOOL 696x348 1

பாடசாலைகளில் பிற்பகல் உணவு திட்டத்தை செப்டம்பர் 14 முதல் மீண்டும் தொடங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக தூரத்தை பராமரிக்கும் போது பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

மாணவர்களிற்கிடையில் சமூக இடைவெளி பேணப்படுவதையும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சிற்றுண்டிச்சாலைகளிற்குள் கூடாமல் இருப்பதையும் உறுதி செய்ய அதிபர்களும் ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் இன்று முதல் அனைத்து தர மாணவர்களிற்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சுகாதார அமைச்சு வழங்கிய பரிந்துரைகளை கடைபிடிக்குமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தது.

காலையிலேயே ஒவ்வொரு வகுப்பு மாணவர்களிடமிருந்து உணவுக்கான ஓடர்களைப் பெறவும், வகுப்பறைகளிலேயே மாணவர்களுக்கு ஓடர்களை விநியோகிக்கவும் கல்வி அமைச்சு பாடசாலைகளிற்கு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க முடிந்தால்தான் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க முடியும் என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.