தமிழீழ வங்கிகளில் தமிழர்கள் வைத்திருந்த நகைகளுக்கு என்ன நடந்தது? – ஸ்ரீதரன்

siritharan 1024x631 1
siritharan 1024x631 1

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது, எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு கொடுக்க மறுக்கின்றீர்கள், அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது

தமிழீழ வங்கிகளில் தமிழர்கள் வைத்திருந்த நகைகளுக்கு என்ன நடந்தது? – ஸ்ரீதரன்

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Dienstag, 8. September 2020

பாராளுமன்றத்தில் இன்று மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்வடாறு தெரிவித்தார். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் நுண் கடனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தைக் காரணங்காட்டி வடக்கு, கிழக்கில் கடந்தக் காலங்களில் பொருளாதார வசதிகள், அபிவிருத்திகளை கடந்த அரசாங்கங்கள் செய்யவில்லை. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படட அபிவிருத்தித் திட்டங்களால் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. கிளிநொச்சியில் 7 பேர் நுண் கடன் திட்டங்களால் தற்கொலை செய்திருக்கிறார்கள். எனவே இது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.