சூது விளையாட்டில் ஈடுப்பட்ட பெண்கள் 8 பேர் கைது!

pai gow
pai gow

திருகோணமலை பகுதியில் சூது விளையாட்டில் ஈடுப்பட்ட பெண்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிற்றூர்தி ஒன்றினை சுமார் 10 ஆயிரம் ரூபா வாடகைக்கு பெற்றுக்கொண்டு இவர்கள் இவ்வாறு சூது விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் 8 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு தினங்களுக்கு முன்னர் சூது விளையாட்டில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களுடன் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.