வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை கைது செய்யுங்கள்- ஆர்.கேசவன் கோரிக்கை

20200909 090350 2
20200909 090350 2

யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் R.கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள்'

'பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள்' – R.கேசவன் கோரிக்கை

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Dienstag, 8. September 2020

முழு வட மாகாணத்திலும் 3 வருடமாக இந்த கழிவகற்றல் விடயம் தொடர்பில் பேசி வருகின்றோம். ஆரம்பத்தில் இருந்து இந்த விடயங்களை மீளபார்க்க முடியாது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகத்தினர்,உள்ளுராட்சி மன்றத்தினர் இணைந்து தங்களுடைய பிரதேசங்களில் அதாவது உதாரணமாக யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதேபோல் நல்லூர் கோப்பாய் போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக வேண்டும். அதாவது எங்கிருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன அதனை முதலில் அடையாளப்படுத்துங்கள்.

அதனை அடையாளம் கண்டு விட்டு உடனடியாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் அவர்களை கைது செய்யுங்கள். இதனை இலகுவாக கைது செய்ய முடியும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள் .

ஒவ்வொரு கிழமையிலும் நீங்கள் இதனை செய்ய வேண்டும். ஒரு மூன்று நாட்கள் இதற்காக ஒதுக்குங்கள் கட்டாயமாக இதனை கட்டுப்படுத்த முடியும். பொலித்தின் மற்றும் இதரகழிவுகளில் மட்டும்தான் இந்த டெங்கு பரவக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.

இவ் வருடம் நாங்கள் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். எமது யாழ் மாவட்டம் டெங்கு சிவப்பு எச்சரிக்கையில் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலைமையை தொடர்ச்சியாக பேணுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக கொரோணா காலத்தில் நாங்கள் இரண்டு விதமான கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றினோம். சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மூலம் எமது கட்டுப்பாட்டு நடவடிக்கையினை மேற்கொண்டோம். அதில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு சட்டம் நமக்கு முழுமையாக வெற்றியை தந்தது எனினும் சுகாதாரப் பிரிவினரால் முககவசங்களை அணியுங்கள்.சமூக இடைவெளியினை பேணுங்கள் என நடை முறைப்படுத்தினோம்.

ஆனால் இன்று மக்கள் மத்தியில் நீங்கள் பார்த்தால் விளங்கிக்கொள்ள முடியும். எங்கேயாவது சமூக இடைவெளி பேணப்படுகின்றதா? அல்லது எங்கேயாவது மக்கள் மாஸ்க் அணிந்து வருகிறார்களா?

டெங்கு கட்டுப்பாட்டு விடயத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து எதிர்வரும் காலத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.