மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் இன்று!

DSC0151
DSC0151

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் இன்று புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு உணர்வுவூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துக்ருக்கொண்டான் பனிச்சையடியில் உள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990.09.09 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் நேற்று (09) புதன்கிழமை மாலை அனுஸ்டிப்பு!

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Mittwoch, 9. September 2020

கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனியச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுவளைப்பின்போது சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என 188க்கும் அதிகமானோர் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அனைவரும் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக அதில் இருந்து தப்பி வந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அது படுகொலையாக கருதப்பட்டு
பனிச்சையடி தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த உறவுகள், அரசியல்வாதிகளினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது பெருமளவான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.