நாடாளுமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த கோரிக்கை முன்வைப்பு

7e037a07e79df833b31b3e2f204e6b7f XL
7e037a07e79df833b31b3e2f204e6b7f XL

நாடாளுமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை முவைத்துள்ளார் .

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதிக எண்ணிக்கையிலான ஆவணங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் பாரியளவில் செலவுகளை குறைக்க முடியும்.

மேலும், இந்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது எனவும், இந்தப் பிரேரணையை தாம் அமோதிப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் மாற்றத்தைச் செய்து ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .