நிலாவெளி கடலில் மூழ்கிய நபர் பொலிஸாரால் மீட்பு

11
11

நிலாவெளி கடலில் நீராடிக் கொண்டிருந்த 21 வயதான கட்டுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் உயிர் காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (27) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு குறித்த நபரிற்கு முதலுதவி வழங்கப்பட்டு, பின்னர் திருகோணமாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 21 வயதான கட்டுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.