அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

20200911145417 IMG 0795
20200911145417 IMG 0795

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க உறுப்பினர்களுக்கு புதிய அரச பொது ஊழியர் சங்க உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் நடவடிக்கை எடுக்க தவறின் வடகிழக்கு ரீதியில் பாரிய பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்வோம் என நகரசபை சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அகில இலங்கை அரச பொது ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் முதல் புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பு செய்யும் போது எமது சங்கத்திலுள்ள ஊழியர்கள் அனைவரும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதே போல் நேற்று மாலை அவர்கள் தங்களுடைய வாக்கு மூலத்தில் அறிவித்திருந்தார்கள் தாங்கள் பணிக்கு திரும்புவதாக அதேபோல் நாங்கள் மிகவும் பல்வேறு துன்பங்கள் மத்தியிலும் வேலை செய்திருந்தோம்.

இன்று புதிய அரச பொது ஊழியர் சங்க ஊழியர்கள் சேவைக்கு வந்தவுடன் எங்களுடைய சாரதி ஒருவரை வெட்டுவதாக கொலை அச்சுறுத்தல் விடுத்தார்கள். அது மட்டுமில்லாமல் நிர்வாகத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிர்வாகத்தை குழப்புகின்றவர்களுக்கும், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

20200911150558 IMG 0800
20200911150558 IMG 0800

அதுமட்டுமில்லாமல் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது இவர்களுக்கு சரியான ஒரு நடவடிக்கை எடுக்குமாறு எடுக்க தவறும் பட்சத்தில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வட கிழக்கு ரீதியாக பாரிய பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்வோம்.

அதுமட்டுமல்லாமல் நகரசபை செயலாளரையும், நகர பிதாவையும் இலக்கு வைத்தே இது நகர்வதாகவே நாங்கள் கருதுகிறோம் என்றும் இந்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

20200911145401 IMG 0794
20200911145401 IMG 0794