இ.போ.சவின் தலைவர் இ.போ.சவின் வவுனியா சாலைக்கு விஐயம்!

1 6 1
1 6 1

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலிரணவக்க இ.போ.சவின் வவுனியா சாலைக்கு
இன்று விஐயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தலைவருக்கு மாலை அணிவித்து கௌரவமளிக்கப்பட்டிருந்துடன் இ.போ.சவின் வவுனியா சாலையின் உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன் போது வவுனியா சாலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், காப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக கேட்டறிந்ததோடு வவுனியா சாலையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தலைவர் இளஞ்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வில் இ.போ.ச யின் தலைவர் கின்சிலிரணவக்க, வட பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர்கள், சாரதிகள் ,காப்பாளர்கள் என பலரும் கலந்துகொன்டிருந்தனர்.