சவளக்கடை உப அஞ்சல் அலுவலகத்தின் நிலைமையை நேரில் ஆராய்ந்த செல்வராஜா கஜேந்திரன்!

post it 2
post it 2

சவளக்கடை உப அஞ்சல் அலுவலகத்தின் கூரை சேதடைந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அறிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் அங்கு சென்று பார்வையிட்டார்.

அம்பாறை மாவட்டத்திற்கு இரு நாட்கள் கள விஜயம் செய்த நிலையில் சவளக்கடை உப அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று சென்றிருந்தார்.

இதன் போது சவளைக்கடை உப அஞ்சல் அலுவலகத்தின் உப தபால் அதிபரை சந்தித்து வளப்பற்றாக்குறை தற்போது உள்ள கட்டடத்தின் நிலைப்பாடு தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றினை பெற்றதுடன் எதிர்வரும் காலங்களில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் பௌதீக வளகுறைபாடுகளுடன், யன்னல்கள் சேதடைந்து சுற்றுமதில் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கிவருகின்றதை ஏற்க முடியாது. தபால் துறை அமைச்சர் மற்றும் தபால் மா அதிபர், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆகியோர்கள் இவ்விடயத்தில் துரித கவனம் செலுத்தி பிரதேச மக்களின் இன்னலை போக்கி உடனடியாக கூரையை புனரமைத்து அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள சவளக்கடை உப அஞ்சல் அலுவலகம் அடிப்படை வசதியற்ற நிலையில் அதன் கூரை சேதமடைந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக பிரதேச பொது அமைப்புகள் கடந்த மாதம் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல் காலங்களில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பார்வையிட்டு சென்றமை சுட்டிக்காட்டத்தக்கது.