எதிர்கால திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகள் – ஜனாதிபதி

11 3
11 3

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிபுணர்கள் அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் அதிகாரங்களில் தலையிட வேண்டிய இடங்களை அடையாளம் கண்டு அதில் ஈடுபடாமல் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்கும் பொறுப்பு நிபுணர்கள் கையில் உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார் .

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நிபுணர்கள் அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்று நேற்றைய தினம் எதுல்கோட்டேவில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் முதன்முறையாக அமைப்பின் உறுப்பினர்களிடையே உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் .

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்கள் உட்பட அனைத்து சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து அரச அமைச்சகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதன் ஊடாக தமது இலக்கை வெற்றிகொள்வதற்கான முறைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது நிபுணர்கள் அமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது .