அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

election commision
election commision

ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய இந்த கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தும் மூன்றாவது கூட்டம் இதுவாகும்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் திகதியும் நவம்பர் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்கனவே, வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நாளுக்கு நாள் தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்ற பின்னணியில் இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதுவரை சுமார் 2000 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.