பெற்றோர் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!

1 15 1
1 15 1

-மட்டக்களப்பில் மாணவர்களிடம் போதை பொருள் பரிமாற்றம் அதிகரிப்பு பெற்றோர் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துமாறு சமூக பொலிஸ் குழுவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எம். சுதர்சன் வேண்டுகோள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவில் போதைப்பொருள் மாணவர்களிடம் பரிமாறப்புடுகின்றது எனவே பெற்றோர் பிள்ளைகள் மீதும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக பொலிஸ் குழுவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம். சுதர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட செயலகத்தினால் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு மாவட்ட செயலணிக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை 15 மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக ஜஸ் போதைப் பொருள் மற்றும் ஹரோயின் போதைப் பொருள் மாணவர்களிடத்தில் பரிமாறப்படுகின்றதுடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கு சென்று வெளியில் வரும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் பரிமாற்றப்படுகின்றது என தகவல்கள் கிடைத்துள்ளது

பாதாள கோஷடி மற்றும் போதை பொருள் கடத்தும் நபர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது இதன் அடிப்படையில் முற்றாக போதை பொருளை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுவருகின்றனா.

இருந்தபோதும் பெற்றோர்கள் உங்களது பிள்ளைகள் மீதும் ஆசிரியர்கள் மாவணர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மாவட்ட ரீதியான போதை பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக பிரதேச ரீதியாக இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். சிறைச்சாலை திணைக்களம். பொலிஸ் திணைக்களம், மதுவரிதிணைக்களம். சுகாதார திணைக்களம. போதை ஒழிப்பு பிரிவு போன்ற திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு போதை பொருளை ஒழிப்பதற்கான விரிவாக ஆராய்ந்தனர்.

இதன் முடிவில் மாவட்டத்துக்கான போதைவஸ்து தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டு இதில் சகல தரப்பினர்களும் உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இந்த செயலணி மாதம் தோறும் கூடி போதைவஸ்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை எவ்வாறு தடுப்பது மாவட்டத்தில் போதைவஸ்து வருகின்ற வழிகள் இதனை விநியோகிக்கின்ற நபர்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பான தீர்மானங்களை எடுத்து நடவடிக்கை எடுக்கும் என முடிவு எடுக்கப்பட்டள்ளது.