முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

IMG 5139
IMG 5139

முல்லைத்தீவு –முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் ஒருதொகுதி வெடிபொருட்கள் இன்று (16) மீட்கப்பட்டுள்ளன.

மீட்க பட்ட ஒருதொகுதி வெடி பொருட்களுக்கு மேலதிகமாக அதே இடத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

தனியார் காணியொன்றை அபிவிருத்தி செய்த வேளை மண்ணில் புதைக்க பட்டிருந்த ஒருதொகுதி வெடி பொருட்கள் வெளி தெரிந்த நிலையில் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை பெற்று அகழ்வு நடவடிக்கைமேற்கொள்ள இருந்த நிலையில் அகழ்வுக்கான இயந்திரம் கிடைக்காத காரணத்தினால் அகழ்வு நடவடிக்கை ஒத்தி வைக்க பட்டுள்ளது.

இப்பகுதியில் , மூன்று பொலித்தீன் பைகளில் அடங்கியுள்ள சுமார் 45 கிலோ கிராம் டிஎன்டி வெடிபொருட்கள், சுமார் 5 கிலோ கிராம் சி 4 வெடிபொருட்கள், 81 மிமீ அளவின் 07 மோட்டார் குண்டுகள், அடையாளம் தெரியாத 15 உருகிகள், 118 எக்ஸ்பெயின் சார்ஜஸ்கள், ஒரு கிலேமோர் குண்டு, அடையாளம் தெரியாத ஒரு குண்டின் பகுதி மற்றும் 01 மின்சார டெட்டனேட்டர் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.