ரஞ்சித் அலுவிஹார தாக்கல் செய்த மனு!

ffba0a09 8d29a0bd 2e2539a7 99bea646 9aad623c court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
ffba0a09 8d29a0bd 2e2539a7 99bea646 9aad623c court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

கடந்த பொது தேர்தலின் போது மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹார தாக்கல் செய்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் நொவெம்பர் மாதம் ஐந்தாம் திகதி மேன்முறையிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

லக்கல மற்றும் தம்புள்ளை தேர்தல் தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் சந்தர்ப்பத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், மாத்தளை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து விருப்பு வாக்குகளும் மீண்டும் எண்ணப்படவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.