கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்தார் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ

download 5
download 5

இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்தில் விதை மற்றும் நடுகைப்பொருள் உற்பத்தி நிலையத்திற்கு சென்று நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உத்தியோகத்தர்களுடன்கலந்துரையாடியுள்ளார்.

6130ff3d6bc5d0ac31530dc7a06cfd3c XL 2
6130ff3d6bc5d0ac31530dc7a06cfd3c XL 2

பின்னர் , கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடான தற்போதை ய தொழிற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் செயற்பாடுகளை அதிகரித்து விவசாயிகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டத்தினை முன்னெடுக்க விருப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .