மாசுபட்ட யாழ்.குருநகர் கடற்பகுதியை காட்சிப்படுத்தும் விழிப்புணா்வு கண்காட்சி

Photosee5
Photosee5

யாழ்ப்பாணத்தில் மிக மாசுபட்ட கடலோர பகுதிகளில் ஒன்றான யாழ்.குருநகா் கடலோர பகுதியை காட்சிப்படுத்தும் விழிப்புணா்வு ஒளிப்பட கண்காட்சி இன்று யாழ்.குருநகா் மீன் சந்தையில் நடைபெருகிறது.

காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடாத்தப்படுகின்ற இந்த கண்காட்சியில் குருநகா் கடலோர பகுதி காட்சிகள், மீனவ மக்கள் தொடா்பான காட்சிகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

புகைப்படக் கலைஞா் தா்மபாலன் ரிலக்ஸனால் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிக முக்கியமானது.

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது.

கடலில் உருவாகிய சிறு உயிரினங்கள் கூர்ப்படைந்து, பின்னர் கடலிலிருந்து தரைக்கு வந்த விலங்குகளின் தொடர்ச்சியான கூர்ப்பின் விளைவாகவே, மனித குலத்தின் ஆரம்பமென்பது நிகழ்ந்தது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

அவ்வாறான முக்கியமான கடலையும் அதன் கரைகளையும், எந்தளவுக்கு நாங்கள் பாதுகாக்கிறோம் என்பது எங்களுக்குரிய கடமை என்பதில், மாற்றுக் கருத்துகள் இருக்கக்கூடாது.