பிரித்தானியா வெளியேறுவதற்கான திகதியை நீட்டிக்க ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல்

brexit 1
brexit 1

பிரெக்ஸிட் நடவடிக்கைகயை எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் காலக்கெடுவிற்கு முன்னர் பிரித்தானியா விலகுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி முன்கூட்டிய தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், முன்மொழிவு மீதான வாக்கெடுப்பிற்குத் தயாராகி வரும் நிலையில் பிரெக்ஸிட் கால நீடிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒப்பந்தமொன்றினூடாகவோ அல்லது ஒப்பந்தமில்லாமலோ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எதிர்வரும் 31 ஆம் திகதி விலகும் என போரிஸ் ஜோன்சன் ஏற்கனவே உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.