யாழ் மாவட்ட செயலகத்தில் மூலிகை மரக்கன்றுகள் நாட்டிவைப்பு

20200917 111443
20200917 111443

“மூலிகையினால் தன்னிறைவு “என்ற நாட்டின் ஜனாதிபதியின் கோரிக்கைக்கிணங்க நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூலிகை மரங்கள் நாட்டும் வேலைத்திட்டம் இன்றைய தினம்(17) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய ஆயுள்வேத திணைக்கள ஒருங்கிணைப்பாளர் கா.நடராசா இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மூலிகையினால் ஏற்படும் பயன்கள் மேலும் உடலில் ஏற்படுகின்ற வியாதிகளை சிறிதளவேனும் கட்டுப்படுத்த முடியும். எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதன் மூலம் கூடுதலான வியாதிகளை நாங்கள் எமது வீட்டில் இருந்தபடியே நோய்களை குணப்படுத்திக்கொள்ள முடியும். ஏனென்றால் பல வைத்திய சாலைகளில் நிறைய பேர் போய் அங்கே இட நெருக்கடிகளையும் நேர காலத்தையும் விரயப்படுத்துகிறார்கள்.

எனவே இவ்வாறான மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து மூலிகை அருந்துவதன் மூலம் நோய்களை தடுக்கலாம்.

ஜனாதிபதியினால் மூலிகை வாரமாக அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது எனினும் இது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் எனினும் மூலிகை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது பிரதான நோக்கம் என தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள வைத்தியர்கள் ,உத்தியோகத்தர்கள்,யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.