20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு!

IMG 20200819 234109
IMG 20200819 234109

முதலாம் வாசிப்பிற்காக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இம் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்

முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவதற்காக 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.