இலங்கையில் தங்கியிருந்த ஒரு தொகுதி இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு!

bc23e8e31790156a18cdf8ea55763171 XL 720x450 1
bc23e8e31790156a18cdf8ea55763171 XL 720x450 1

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்19 நோய் தொற்று காரணமாகநாட்டில் தங்கியிருந்த ஒரு தொகுதி இந்தியர்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவர்கள் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இருந்து பெங்களூர் மற்றும் புதுடெல்லிக்கு சிறப்பு ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியப் பொதுமக்களை திருப்பி அழைப்பதற்காக உலகெங்கிலும் இருந்து இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான இந்திய அரசாங்கத்தின் ‘வந்தே பாரத் மிஷன்’ ஒரு பகுதியாக இந்த விமானம் இன்று இந்தியர்களை இலங்கையில் இருந்து அழைத்துச் சென்றது.

வந்தே பாரத் மிஷனின் பல்வேறு முறைகள் மூலம் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்துவரப்பட்டுள்ளனர்.