ஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்பவே முடியாது ராஜபக்ச அரசு: அநுரகுமார!

Anura Kumara Dissanayake 640x415 1
Anura Kumara Dissanayake 640x415 1


“ஐ.நா. தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகினாலும் ஐ.நா. மனித சபையின் உறுப்புரிமை நாடுகளில் இலங்கை தொடர்ந்து அங்கம் வகிக்கின்றது. எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு நிராகரித்தாலும் ஐ.நா. வைத்துள்ள பொறியில் இருந்து ஒருபோதும் தப்பவே முடியாது.”

– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்துள்ளமை தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ராஜபக்ச அரசு மீது நாம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களையே தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் முன்வைத்துள்ளார். இந்தநிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று அரசு எப்படிக் கூற முடியும்?

இந்த ஆட்சி குடும்ப ஆட்சி; இராணுவ ஆட்சி; சர்வாதிகார ஆட்சி. குற்றங்கள்தான் இந்த ஆட்சியில் மலிந்து கிடக்கும். இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்கள்தான் பாவப்பட்டவர்கள்” – என்றார்.