மஞ்சளை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது :அமைச்சர் பந்துல குணவர்தன!

Bandula Gunawardena 1
Bandula Gunawardena 1

சந்தையில் மஞ்சள் பற்றாக்குறை இருந்தாலும், ஒருபோதும் மஞ்சள் இறக்குமதி செய்யப்படாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

உள்ளூர் மஞ்சள் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் மஞ்சளை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

இருப்பினும், மஞ்சள் இறக்குமதியாளர்கள் மஞ்சளை நாட்டிற்கு இறக்குமதி செய்து சந்தைக்கு விடுவிக்க அனுமதி கோருகின்றனர்.

இதற்கிடையில், புளூமெண்டால் பகுதியில் 10 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

அதில் 33,000 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 7 லொரிகள் அடங்கிய மூன்று கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன.

கண்ணாடி இறக்குமதி என்ற போர்வையில் அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நுகர்வுக்கு தகுதியற்ற 100 கிலோ மஞ்சள் ஹட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.